காஞ்சிபுரம் – முக்கிய கோவில்கள்

காஞ்சிபுரம் – முக்கிய கோவில்கள்

கைலாசநாதர் கோவில்

பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் 7ம் நூற்றாண்டில் கட்டிய கோவில்.

கோவில் நேரம் – காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ, காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து 2.7 கி.மீ தொலைவில் மேற்கில் அமைந்துள்ளது.

காமாட்சி அம்மன் கோவில்

12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

ஏகாம்பரநாதர் கோவில்

பஞ்சபூத சைவத் தலங்களில் ஒரு முக்கிய கோவில். பஞ்சபூதங்களில் நிலத்திற்குரிய கோவில் இது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கிருஷ்ணதேவராயர் கட்டிய கோவில்.

கோவில் நேரம் – காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

வரதராஜ பெருமாள் கோவில்

அத்திவரதர் கோவில், ஸ்ரீதேவராஜ சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ கிழக்கில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் சில முக்கி அரசர்களால் கட்டப்பட்ட கோவில் விஜயநகரப் பேரரசர்கள் கட்டிய 100 கால் மண்டபம் இங்கு புகழ் பெற்ற ஒன்று.

கோவில் நேரம் – காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

வைகுண்ட பெருமாள் கோவில்

108 திவ்ய தேசக் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ வடக்கில் உள்ளது. 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நந்திவர்மன் இக்கோவிலைக் கட்டினார்.

கோவில் நேரம் – காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

உலகலளந்தார் பெருமாள் கோவில்

ஜெயம் கொண்ட சோழன் இக்கோவிலைக் கட்டினார். திரு ஊரகம், திருநீரகம், திருக்கர்வனம் என ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே மிக அருகில் உள்ளது

ஸ்ரீஅஷ்டபுஜம் கோவில்

108 திவ்ய தேசங்களில் இக்கோவிலும் ஒன்று. தொண்டைமான் சக்ரவர்த்தி இக்கோவிலைக் கட்டினார். எட்டு புஜங்கள் கொண்ட பெருமாள் இருப்பதால் அஷ்டபுஜக் கோவில் என அழைக்கப்படுகிறது.

கோவில் நேரம் – காலை 7 மணி முதல் 12 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை

குமரகோட்டம்

பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே ஒரு கி.மீ தொலைவில் இக்கோவில் உள்ளது.