சென்னை டூ பரந்தூர் மெட்ரோ ரயில், ஆறு மாதத்தில் திட்ட அறிக்கை

சென்னை டூ பரந்தூர் மெட்ரோ ரயில், ஆறு மாதத்தில் திட்ட அறிக்கை

சென்னையின் புதிய சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் அருகில் பரந்தூர் கிராமத்தில் அமைய உள்ளது. விமான நிலையத்திற்கு சென்னை, பூந்தமல்லியில் இருந்து மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க டெண்டர் விடப்பட்டிருந்தது.

அடுத்த ஆறு மாதங்களில் அந்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க ஆர்வி அசோசியேட்டட் ஆர்க்கிடெக்ட்ஸ் எஞ்சினியர்ஸ் அன்ட் கன்சல்டன்ட்ஸ் என் நிறுவனத்திற்கு டெண்டர் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் வரையிலான 43.63 கி.மீ. நீளப் பாதையில் மொத்தம் 19 ரயில் நிலையங்கள் வர உள்ளன.

பூந்தமல்லியில் ஆரம்பமாகி நசரத்பேட் போலீஸ் செக்போஸ்ட், செம்பரம்பாக்கம், திருமழிசை டவுன்ஷிப், பாப்பான்சத்திரம், செட்டிப்பேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், மாம்பாக்கம், திருமங்கலம், சுங்குவார்சத்திரம், சந்தவேலூர், பிள்ளைசத்திரம், நீர்வளூர், பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

பரந்தூர் விமான நிலையம் ஒரு உள்ளூர் டெர்மினர், ஒரு சர்வதேச டெர்மினல், ரன்வே ஆகியவற்றுடன் 2029ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க முடிவெடுத்துள்ளார்கள்.